×

குஜராத்தில் இருந்து மாநிலங்களவை எம்.பி. ஆகிறார் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா

டெல்லி: நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கு இன்னும் ஒரு சில மாதங்களே உள்ள நிலையில் இதற்கு முன்பே உத்திரபிரதேசம், பீகார், ஆந்திரா, உள்ளிட்ட 15 மாநிலங்களில் காலியாகவுள்ள 56 மாநிலங்களவை உறிப்பினர் இடங்களுக்கு பிப்ரவரி 27-ம் தேதி தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் தெரரிவித்திருந்தது. மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிகாலம் ஏப்ரல் மாதத்துடன் நிரைவடைய உள்ள நிலையில் இதற்கான தேர்தல் தேதி அறிவிக்கபட்டுள்ளது. பிப்ரவரி 27-ம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை வாக்கு பதிவு நடைபெறும். அன்றைய தினமே வாக்கு எண்ணிக்கையும் நடைபெறவுள்ளது.

இந்த சூழலில் பாஜக, காங்கிரஸ், உள்ளிட்ட தேசிய கட்சிகள் தங்களின் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு வருகிறது. இந்த நிலையில், குஜராத் மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களில் காலியாக உள்ள மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான வேட்பாளர் பட்டியல் வெளியிடபட்டுள்ளது. அதில் குறிப்பாக குஜராத் மாநிலத்தில் பாஜக கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா போட்டியிடுவதாக அறிவிக்கபட்டுள்ளது.

மகாராஷ்ட்டிரா மாநிலத்தை பொறுத்தவரை சில நாட்களுக்கு முன்பு மகாராஷ்ட்டிரா மாநிலத்தின் முன்னால் முதல்வர் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவராக இருந்த அசோக் சவான் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி நேற்று பாஜகவில் இணைந்தார். தற்போது வருக்கு மாநிலங்களவையில் சீட் வழங்கப்பட்டது முக்கியமாக பார்க்கப்படுகிறது.

The post குஜராத்தில் இருந்து மாநிலங்களவை எம்.பி. ஆகிறார் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா appeared first on Dinakaran.

Tags : Gujarat ,M. B. ,J. B. Nata ,Delhi ,Uttar Pradesh ,Bihar ,Andhra Pradesh ,
× RELATED இந்த தேர்தல் சாதாரண தேர்தல் அல்ல; நமது...